காக்காவேரியில் தூய கார்மேல் அன்னை ஆலயத் திருவிழா

82பார்த்தது
காக்காவேரியில் தூய கார்மேல் அன்னை ஆலயத் திருவிழா
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் காக்காவேரியில் அமைந்துள்ள 300 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த சேலம் மறைமாவட்டத்திற்குட்பட்ட தூய கார்மேல் அன்னை ஆலயத்தின் இவ்வாண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

இந்நிகழ்வை நாமக்கல் மறைவட்ட முதன்மை குரு அருட்பணி தாமஸ் மாணிக்கம் தலைமையில் திருவிழா கொடி மந்திரிக்கப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திருப்பலியும் நடைபெற்றது.

இந்நிகழ்வினை பங்குதந்தை அருட்பணி இக்னேஷியஸ் பிதேலிஸ் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். இறைமக்கள் மற்றும் சுற்றுவட்டார பிற சமயத்தினரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி