நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ஆர்.சி.எச். வகை பருத்தி ரூ.7,289 முதல் ரூ.7,996 வரையிலும், சுரபி ரகம் ரூ.8,300 முதல் ரூ.9,321 வரை, மட்ட வகை ரூ.4,025 முதல் ரூ.4,700 வரையிலும் விற்பனையானது. மொத்தம் 3,250 மூட்டைகள் வந்த நிலையில் 85 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடைபெற்றது.