நாமகிரிப்பேட்டையில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ. 29 லட்சம் மதிப்பில் புதிய சிறுவர் பூங்கா அமைக்கும் பணி நிறைவுற்றுள்ளது. இளைஞர்களுக்கான உடற்பயிற்சி உபகரணங்களுடன் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவை மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே. ஆர். என். ராஜேஸ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
பேரூராட்சி முன்னாள் தலைவர் எம். சேரன், துணைத் தலைவர் கே. அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதுபோல தண்ணீர்பந்தல்காடு கும்மக்கொட்டாய் பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக பகுதிநேர நியாயவிலைக் கடையைத் திறந்துவைத்து, பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்.