நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகில் உள்ள மெட்டாலா லயோலா கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வை நாட்டு நலப்பணி திட்டம் இளைஞர் செஞ் சிலுவை சங்கம் இணைந்து நடத்தினர். இம்முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா ராசிபுரம் அரசு மருத்துவமனை அவர்கள் இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை வழங்கினார்.
மங்களபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இம் முகாமிற்கு நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராஜா மோகன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரி செயலர் தந்தை முனைவர் டேனிஷ் பொன்னையா அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஜா. ஜோஸ்பின் டெய்சி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இம் முகாமில் 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தம்முடைய இரத்தத்தை தானமாக வழங்கினார்கள். இந்நிகழ்விற்கு இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா. கி. தங்கவேல், அவர்கள் நன்றியுரை வழங்கினார்.