பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களின் 86 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்டம் ராசிபுரம் நகரத்தில் பல்வேறு இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி கொடிகளையும், வன்னியர் சங்க கொடிகளையும் மாவட்ட செயலாளர் கோபி பொன்னுசாமி, மற்றும் மாநில இளைஞர் சங்க செயலாளர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும் வழக்கறிஞர் ச. வடிவேலன் ஆகியோர் தலைமையில் கொடி ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு அரிமா. ஆ. மோகன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், முன்னாள் கவுன்சிலர் முன்னிலை வகித்தார். மேலும் கோனேரிப்பட்டி நகராட்சி துவக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு மற்றும் பேனா, பென்சில்களை வழங்கினர்.