நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகராட்சியுடன் பட்டணம் பேரூராட்சி, சந்திரசேகர் புரம், கோனேரிப்பட்டி, கட்டனாச்சம்பட்டி, முத்துக்காளிப்பட்டி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட 5 ஊராட்சிகளை இராசிபுரம் நகராட்சியுடன் இணைப்பதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டி ஊராட்சி பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.