புதிய குற்றவியல் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்பாட்டம்

64பார்த்தது
புதிய குற்றவியல் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்பாட்டம்
நாடுமுழுவதும் புதிய குற்றவியல் நடைமுறை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதை ரத்து செய்யக்கோரி ராசிபுரம் நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் காமராஜ், வாசுதேவன் தலைமை தாங்கினார்.

மேலும் இந்த சட்டங்கள் அணைத்தும் வடமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கும் கண்டனம் தெரிவித்தும் ஆர்பாட்டத்தில் கோஷமெழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் புதிய சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் வழக்கறிஞர்கள் முழக்கமிட்டனர்.

ஆர்பாட்டத்தில் வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தங்கதுரை, சதீஸ், கதிர்வேல், செல்வகுமார், ஜி. பூபதி, ஹரி, கீதாலட்சுமி, ராதாசந்திசேகரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி