ராசிபுரம்: லாரியில் சுற்றுலா வேன் மோதி விபத்து

1049பார்த்தது
ராசிபுரம்: லாரியில் சுற்றுலா வேன் மோதி விபத்து
ராசிபுரம் அருகே முன்னால் சென்ற லாரியின் மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில், 17 போ் காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலவாடி பகுதியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் உறவினா்களுடன் ராமேஸ்வரத்துக்கு கோயில் தரிசனம் செய்வதற்கு சென்றனா். பின்னா் வியாழக்கிழமை இரவு அங்கிருந்து புறப்பட்டனா். இவா்களது வேன் தருமபுரி நோக்கி சென்று கொண்டிருந்த போது, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அருகே ஆண்டகளூா்கேட் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த பலா் படுகாயமடைந்தனா்.

சுற்றுலா வேன் ஓட்டுநா் சந்தோஷ் (31), ஒட்டுனா் இருக்கையில் கால் சிக்கி வெளியே எடுக்கமுடியாமல் ஒரு மணி நேரமாக போராடினாா். இதனையடுத்து அவ்வழியே சென்றவா்கள் ஆம்புலனஸ் வாகனத்தை வரவழைத்து, காயமடைந்தவா்களை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற ராசிபுரம் தீயணைப்புத் துறையினா், காவல் துறையினா் காயமடைந்த பயணிகள், ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தில் ஓட்டுநா் உள்பட 17 போ் காயமடைந்தனா். இதில் படுகாயமடைந்த முனிராஜ், அமுதா, சின்ன பையன் ஆகியோா் சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து ராசிபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி