

இராசிபுரம்: அதிமுக சார்பில் அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெண்களை இழிவாக பேசி, இந்து மதத்தையும் அவதூறாக பேசியதாக அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், அவர் பதவி விலக கோரியும் இன்று நாமக்கல் மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில், இராசிபுரம் உள்ள இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே, முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சரோஜா, பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் என 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.