பரமத்தி அருகே பிள்ளைக்களத்தூரில் புள்ளி மான் ஒன்று இறந்து கிடப்பதாக பிள்ளகளத்தூர் கிராம நிர்வாக உதவியாளர் மகேஷ்வரி, பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பிள்ளைக்களத்தூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் தோட்டத்தில் சுமார் 6 வயதுடைய புள்ளி மான் இறந்து கிடந்தது தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் நாமக்கல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த வனத்துறையினர் இறந்து கிடந்த புள்ளி மானை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.