விவசாயிகளுக்கு காரீப் பருவ பயிற்சி

54பார்த்தது
நாமக்கல் வட்டாரம், ராசாம்பாளையம் கிராமத்தில் (அட்மா) திட்டத்தின் மூலம் 'கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு காரீப் பருவப் சாகுபடி தொழில் நுட்பங்கள்' குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமை வகித்து, வேளாண் துறையின் மானியத்திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம், நுண்ணீர் பாசனத்திட்டம், பயிர் காப்பீடு திட்டம் (ம) பிரதம மந்திரி கௌரவ நிதித் திட்டம் விபரங்கள் குறித்து விளக்கமளித்து பயிற்சியளித்தார்.

மேலும் சிறப்பு பயிற்றுநர் மாதேஸ்வரன் துணை வேளாண்மை அலுவலர். , (ஒய்வு) தற்போது பயிரிடப்படும் பயிர்களில் நோய், பூச்சி மேலாண்மை முறைகள், உயிர் உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பயிற்சியளித்தார்.

அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர். இரமேஷ் அட்மா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். உதவி தொழில் நுட்ப மேலாளர்கள். கவிசங்கர் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் வருகைபுரிந்த விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்களை விளக்கமளித்து பதிவேற்றம் செய்தும் நன்றி கூறி இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி