ஆயுத பூஜையையொட்டி பொரி உற்பத்தி மும்முரம்

356பார்த்தது
ஆயுத பூஜையையொட்டி பொரி உற்பத்தி மும்முரம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொரி தயார் செய்யப்பட்டாலும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உற்பத்தி செய்யப்படும் பொரிக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உள்ளது. இதற்கு கர்நாடக மாநிலத்தில் விளையும் பவானி அரிசி மூலம் பொரி தயார் செய்யப்படுவதே காரணமாகும். விறுவிறுப்புஆயுத பூஜை பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் பரமத்திவேலூர் பகுதியில் பொரி தயாரிப்பு பணி விறுவிறுப்படைந்துள்ளது. பரமத்திவேலூர், சுல்தான்பேட்டையில் விறகுகளில் நெருப்பு மூட்டி மண் அடுப்பில் வைத்து தயார் செய்யப்படும் பொரி சுவையாக இருக்கும். இதனால் மக்கள் இந்த பொரிகளையே விரும்பி வாங்குகின்றனர். மொத்த ஆர்டர்களும் குவிகின்றது. ரூ. 450 ஆக உயர்வுஅதே சமயம் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது பொரியின் விலையும் கடும் ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக ஒரு மூட்டை பொரி 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி