கந்தம்பாளையம், வசந்தபுரத்தில் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி கரிவரத பெருமாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. மாலை திருக்கல்யாணம் சீர்வரிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு கரி வரதராஜ பெருமாள் உற்சவருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு திருக்கல்யாண பூஜை செய்யப்பட்ட மாங்கல்யம் வழங்கப்பட்டது.