பரமத்தி வேலூரில் எலக்ட்ரிக் கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

79பார்த்தது
பரமத்தி வேலூரில் எலக்ட்ரிக் கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு
ப. வேலூர்: கந்தம்பாளையம் அருகே, உலகப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம், 62; இவர், அதே பகுதியில் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். நேற்று காலை, கடையைத் திறக்க வந்தபோது, ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டியை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த, 65,000 ரூபாயைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி