பரமத்தி அடுத்துள்ள இருக்கூர் ஊராட்சி வடக்கு செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி ரவி என்கிற பொன்னுசாமி (55) இவரது மனைவி வாசுகி (50). இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ரவி வடக்கு செல்லப்பம்பாளையத்திலிருந்து அவர்கள் நாமக்கல் அருகே உள்ள ராசாம்பாளையம் டோல்கேட் அருகே வாடகை வீட்டில் தங்கி பெரியூர் பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அங்கு காய்கறி விவசாயம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு அவரது வீடு திறக்கப்படாமல் இருந்த நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் லேசான துர்நாற்றம் வீசியதால் அருகில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது ரவி அவரது மனைவி வாசுகி இருவரும் இறந்து உடல் அழுகிய நிலையில் வீட்டிற்குள் கிடந்துள்ளனர். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பரமத்தி காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் இறந்து உடல் அழுகிய நிலையில் கிடந்தனர். இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.