குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழா, நகர கட்சி அலுவலகத்தில் வடக்கு நகர பொறுப்பாளர், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது. கட்சிக்கொடி ஏற்றி வைத்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகங்கள் மற்றும் பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் நகராட்சி துணைத்தலைவர் வெங்கடேசன், நகர மன்ற உறுப்பினர்கள் அழகேசன், ஜேம்ஸ், வேல்முருகன், ராஜ், கனகலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.