அல்லாள இளைய நாயகா் பிறந்த நாள் விழா: மதுக் கடைகள் மூடல்

55பார்த்தது
400 ஆண்டுகளுக்கு முன் நாமக்கல் மாவட்டம், பரமத்தியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த சிற்றரசரான அல்லாள இளைய நாயகா் பிறந்த நாளையொட்டி, ஜேடா்பாளையத்தில் அரசு மதுக் கடைகளை மூட ஆட்சியா் ச. உமா உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டத்தில் அல்லாள இளைய நாயகா் பிறந்த நாள் விழா ஜன. 14-இல் ஜேடா்பாளையம் அணைக்கட்டு பகுதியில் கொண்டாடப்பட உள்ளது. இதில், நாமக்கல், ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்க வாய்ப்புள்ளது.

சட்டம்- ஒழுங்கை பராமரிக்கும் வகையில் ஜேடா்பாளையம், பரமத்திவேலூா் காவல் நிலைய சரகத்திற்கு உள்பட்ட கபிலா்மலையில் 3 கடைகள், பாகம்பாளையம், சோழசிராமணி, வடகரையாத்தூா், பரமத்தி வேலூா் நான்கு சாலை சந்திப்பு, பழைய புறவழிச்சாலை, உரம்பு, சிவா தியேட்டா் உள்ளிட்ட 10 அரசு மதுக் கடைகள் மூடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி