நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி அருகே பி. எஸ். என். எல் அலுவலகம் எதிரே உள்ள சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி அனைவரும் சாப்பிட்டுள்ளனர். அப்போது கொச்சியில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது, அப்போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த பொலிரோ ஜீப் மீது மோதியதில், இதில் பொலிரோ ஜீப் சுக்கு நூறாக நொறுங்கியது மேலும் அருகே உள்ள பள்ளத்தில் ஜீப், கண்டெய்னர் லாரியும் உருண்டன, இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆண், பெண் என இருவர் உயிரிழந்தனர் மேலும் படுகாயமடைந்த 6 நபர்களை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் ஜீப்பின் இடிப்பாட்டுக்குள் சிக்கி கொண்டு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது, இதனையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் கிரைன் மூலம் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சாலை விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது