நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள ரயில் நிலையத்தை மத்திய இணை அமைச்சர் முருகன் நாமக்கல் இரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பொழுது திருநெல்வேலியிலிருந்து மதுரை, கரூர், ஈரோடு, சேலம் வழியாக ஸ்ரீ மாதா வைஸ்னவ் தேவி கத்ரா வரை சென்று வரும் வாராந்திர ரயிலை கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன் மூலம் நாமக்கல்லிருந்து புதுடில்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் சென்றுவர ஏதுவாக அமையும். இது தவிர பயணநேரமும் ஒரு மணிநேரம் குறையும் மற்றும் பயணதூரமும் சுமார் 41 கிலோமீட்டர் குறையும். மத்திய அமைச்சர் முருகன் ஆவண செய்வதாக கூறினார்கள். அப்பொழுது சேலம் ரயில்வே கோட்ட உயர்அதிகாரிகள் உடனிருந்தனர்.