நாமக்கல் மாவட்டத்தில், நாளை காந்தி ஜெயந்தியையொட்டி, இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை மூட வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை மூடி வைக்க வேண்டும். அவற்றை மீறி, திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. "