நாமக்கல் ரங்கநாதர் கோவில் அடிவாரத்தில் திருப்பாவை குழுவினர் தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக இந்த ஆண்டும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மல்லிகா குழந்தைவேலு கலந்துகொண்டு பெண்களுக்கு வளையல் அணிவித்து சிறப்பித்தார். மேலும் வந்து இந்த கர்ப்பிணி பெண்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.