நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி பூக்கடை அருகில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்பி மாதேஸ்வரன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.