நாமக்கல் அருகே லத்துவாடியில் நடைபெற்ற, புத்தக வெளியீட்டு விழாவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேசினார்.
போலீசாருக்கு வழங்கியுள்ள அதிகாரம் பொதுமக்களை பாதுகாக்கதான் அதை அவர்கள் உணர வேண்டும் என ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறினார்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் எழுதிய கடைசித் தறியில் கண்டாங்கிச் சேலை எனும் புத்தகம் வெளியீட்டு விழா நாமக்கல் அருகே லத்துவாடி நம்பிக்கை இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சகாயம் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற போலீஸ் கஸ்டடி மரணம் எந்த சூழலிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மக்களை பாதுகாக்கத்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
இதில் தமிழக முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். போலீசாரே அத்துமீறிய செயலில் ஈடுபடக்கூடாது. இதில் கவனம் செலுத்தவில்லையெனில் ஆட்சிக்கு பெரிய அவப்பெயர் வந்துவிடும். "என சகாயம் தெரிவித்தார்