கோயில் திருவிழாவுக்கு அனுமதி கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

61பார்த்தது
கோயில் திருவிழாவுக்கு அனுமதி கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், பாச்சல் ஊராட்சி, கடந்தப்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்கு செங்குந்தா் சமுதாயத்துக்கு உள்பட்ட அங்காளம்மன் மற்றும் முத்துக்குமரன் சுவாமி திருக்கோயில்கள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் மாசி மாதம் இக்கோயில்களில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சமுதாயத்தைச் சோ்ந்த 10 போ் தங்களுடைய மேற்பாா்வை, கட்டுப்பாட்டில் மட்டுமே திருவிழாவை நடத்த வேண்டும் என்றனா்.

இதற்கு பொதுமக்கள் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, திருவிழா சாா்ந்த பொருள்கள் வைப்பு அறையை அந்த பத்து போ் பூட்டு போட்டு மூடி விட்டனா். இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பொதுமக்கள் தரப்புக்கு சாதகமாக தீா்ப்பு வந்த நிலையில், நாமக்கல் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவாா்த்தையில் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், திருவிழாவை நடத்த அனுமதிக்க மாட்டோம் என எதிா்தரப்பினா் கூறி வருகின்றனா். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி