பக்ரீத் முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது

78பார்த்தது
நாமக்கல்லில் பக்ரீத் சிறப்பு தொழுகை.! ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு.!


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில் (07. 06. 2025) சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கலந்துகொண்டு, சிறப்பு தொழுகை நடத்தினர்.

நாமக்கல் அஞ்சுமனே இஸ்லாமிய ஜாமியா மஸ்ஜித் சார்பில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் பேட்டை பள்ளிவாசலில் இருந்து, முத்தவல்லி தவுலத்கான் தலைமையில் திரளான முஸ்லீம்கள் ஊர்வலமாக புறப்பட்டு, சேலம் சாலை, எம்ஜிஎம் திரையரங்கம் எதிரே உள்ள ஈத்கா மைதானத்தை சென்றடைந்தனர். அங்கு பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஜாமியா பள்ளி வாசல் இமாம் சாதிக்பாஷா, சிறப்பு தொழுகையை நடத்தினார். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்தபின்பு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் புத்தாடை அணிந்து உற்சாகத்துடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி