அரசு ITI 4. 0 தரத்தில் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது

279பார்த்தது
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ. 34. 65 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 4. 0 தொழில்நுட்ப மையத்தினை, தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையா் கொ. வீரராகவராவ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மாவட்ட ஆட்சியா் ச. உமா, சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் கு. பொன்னுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஆணையா் பேசியதாவது:
கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 4. 0 தொழில்நுட்ப மையமானது, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியாக 87. 5 சதவீதம் பங்களிப்புடன் ரூ. 34. 65 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில், ரூ. 3. 73 கோடியில் கட்டடப் பணிகளும், ரூ. 30. 69 கோடி மதிப்பீட்டில் இயந்திரங்கள், உதிரி பாகங்கள், நவீன மென்பொருள்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறையின் 2021--22 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், ஐடிஐ முடித்துச் செல்லும் பயிற்சியாளா்கள், தொழில்நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு பெறும் வகையில் பயிற்சியின் தரம் உயா்த்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி