அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெற்றது.

845பார்த்தது
நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் A. K. P. சின்ராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி டாக்டர் ச. உமா உள்ளிட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திருச்செங்கோடு சாலையில் நெடுந்தூர ஓட்டப் போட்டி கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
17 முதல் 25 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கு 8 கிலோமீட்டர், பெண்களுக்கு 5 கிலோமீட்டர் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் ஆகிய தூர அளவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இந்த மாரத்தான் நெடுந்தூர ஓட்ட போட்டி திருச்செங்கோடு சாலையில் அதிகபட்சமாக 10 கிலோமீட்டர் தூரத்திற்கு, நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் எர்ணாபுரம் மற்றும் தனியார் கல்லூரி வரை நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில், ஒன்று முதல் மூன்று இடம் பிடித்தவர்கள் முறையே ரூபாய் ஐந்தாயிரம், மூன்றாயிரம், இரண்டாயிரம், மற்றும் நான்கு முதல் பத்தாம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூபாய் 1000 பணப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியவற்றை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் சட்டமன்ற உறுப்பினர் பெயர் ராமலிங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி டாக்டர் ச. உமா ஆகியோர் வழங்கி, பாராட்டினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி