முடிதிருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக் கோரிக்கை"

63பார்த்தது
தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஏ. ராமஜெயம் வரவேற்றாா். மாநில பொதுச் செயலாளா் டி. கே. ராஜா, பொருளாளா் எஸ். நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில், பொதுக்குழு தீா்மானங்களையும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் சங்கத்தின் மாநிலத் தலைவா் எம். முனுசாமி பேசினாா்.

இதில், சவரத் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலைஞா் கைவினை திட்டத்தை செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், கலைஞா் கைவினைத் திட்டத்தின் பயனாளிகளுக்கான வயது வரம்பை தளா்த்த வேண்டும். வங்கிகளில் கடன் பெறுவதற்கான நெருக்கடிகளைக் களைவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.
விவசாயம், விசைத்தறி தொழிலுக்கு உள்ளதுபோல், முடிதிருத்தகங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் இத்தொழில் செய்யும் சமூக மக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி