பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 15 வயதுடைய மாணவி ஒருவர் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி பள்ளிக்குச் செல்லும் போது அந்த பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவர் மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் பிரதீப் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரைத் தேடிச் சென்றபோது பிரதீப் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். தலைமறைவாக உள்ள அவரை வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.