நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று மக்கள் குறைத்தீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பரமத்திவேலூர் அருகே அமைந்துள்ள பெரிய சோழி பாளையம் பகுதி சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் எங்கள் பகுதிக்கு சரிவர பேருந்து வசதி இல்லாத காரணத்தால் தினந்தோறும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக தலையிட்டு எங்கள் பகுதிக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என அதில் தெரிவித்திருந்தனர்.