நாமக்கல்லில் சாலையோரம் இறந்து கிடந்த பெயிண்டர்

61பார்த்தது
நாமக்கல்லில் சாலையோரம் இறந்து கிடந்த பெயிண்டர்
நாமக்கல் - பரமத்தி சாலை, இ.பி., காலனியில் டி.எஸ்.பி., அலுவலகம் உள்ளது. இதன் அருகே சாலையோரம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் வாயில் நுரை தள்ளியபடி கிடந்தார். அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. நாமக்கல் போலீசார் விசாரணையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த முத்தையன், 52, என்பதும், பெயின்டரான இவர் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இறப்புக்கான காரணம் குறித்து நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி