அறிவுசார் மையத்தினை பயன்படுத்த நகராட்சி ஆணையர் அறிவுரை

61பார்த்தது
குமாரபாளையம் நகராட்சியில் அறிவுசார் மையத்தினை பயன்படுத்தி, அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள நகராட்சி ஆணையர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் குமரன் தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ,

 

குமாரபாளையம் நகராட்சியில் முதல்வர் உத்திரவுப்படி 1. 92 கோடியில் அறிவுசார் மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.   இது காலை 08: 00 முதல் இரவு 08: 00 வரை செயல்படுகிறது. மாணவர்கள் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில , மற்றும் வங்கி பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்கள், சிறுவர், சிறுமியர்களுக்கான புத்தகங்கள், தமிழ், ஆங்கில நாளிதழ்கள் உள்ளன. இணைய வசதியுடன் கூடிய கணினி அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அறிவுத்திறன்களை மேம்படுத்த ஸ்மார்ட் கிளாஸ் போன்றவை அமைக்கப்பட்டு, தலைசிறந்த நிபுணர்களால் வாரந்தோறும் வகுப்புகள், கருத்தரங்கங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குமாரபாளையம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மாணவ, மாணவியர் இந்த அறிவுசார் மையத்தினை பயன்படுத்தி, அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி