மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

159பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் பி. சத்யா தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஆா். முருகேசன் தொடக்க உரையாற்றினாா். சிஐடியு மாவட்டத் தலைவா் எம். அசோகன், மாவட்டச் செயலாளா் ந. வேலுசாமி, பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலாளா் வி. இளவேந்தன், கூட்டுறவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம். ரங்கசாமி உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். இதில், மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும். ஊக்கத்தொகை ரூ. 2 ஆயிரத்தை காலதாமதமின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும். ஊழியா்களுக்கு பேறுகால சலுகைகளை வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை செலவுக்கு ஒரு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான ஊழியா்கள் கலந்துகொண்டனா். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி