நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பல பட்டறை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இன்று(செப்.20) ஐந்தாவது நாள் மண்டல பூஜையை முன்னிட்டு சாமிக்கு காலையிலேயே சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் மேட்டு தெரு பொதுமக்கள் பால்குடம் எடுத்து வந்த நிலையில், சாமிக்கு சுமார் 500 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டு அதன் பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர்.