நாமக்கல் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களை வைத்து பலரும் தொழில் புரியும் நிலையில், வாகனங்கள் விலை உயர்வு, சாலை வரி உயர்வு உதிரி பாகங்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஜேசிபி வாகனத்தின்
வாடகை உயர்வை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் கடந்த 3 நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்
நாமக்கல் -திருச்செங்கோடு சாலையில் நல்லிபாளையம் பகுதியில் 60க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களை ஒரே இடத்தில் நிறுத்தி கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தை ஈடுபட்டு வந்தனர் இன்றுடன் அடையாள வேலை நிறுத்தம் முடிவடைந்த நிலையில் தங்களது நாளை முதல் ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 2500 வாடகை நிர்ணயம் செய்தனர்