நல்லிபாளையத்தில் அருகே அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று (அக் 4) உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில், பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி பெற கட்டணமில்லா அழைப்பை எண் 15100 அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதிகள் சார்பு நீதிபதிகள் மற்றும் சட்டக் கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகள் வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.