ராசிபுரத்தில் பள்ளி வகுப்பறைகள் திறப்பு விழா

76பார்த்தது
ராசிபுரத்தில் பள்ளி வகுப்பறைகள் திறப்பு விழா
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ. 40. 00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள நான்கு வகுப்பறைகள் மற்றும் ரூ. 9. 60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள படிக்கட்டுகளை எம்பி ராஜேஷ்குமார் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.

உடன் நகர மன்ற தலைவர் கவிதா சங்கர், நகர கழக செயலாளர் சங்கர், நகர மன்ற உறுப்பினர்கள் சண்முகம், செல்வம், சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்கள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி