நாமக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து மிக கனமழை மற்றும் சாரல் மழை பெய்தது. நேற்று இரவில் ஒரே நாளில் மட்டும் 100 மில்லி மீட்டர் அளவுக்கு மழைப் பதிவானது. இதில் நாமக்கல் நகரம் மட்டும் சுமார் 26 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது. இதனால் சேலம் சாலை, திருச்செங்கோடு சாலை, சேந்தமங்கலம் சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சற்று சிரமம் அடைந்தனர்.