நாமக்கல் நகர மையப் பகுதியில் அமைந்துள்ளது ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 30ம் தேதி அனுமன் ஜெயந்தி முன்னிட்டு கோயில் சுற்றியுள்ள பகுதியில் பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகின்றனர். நேற்று (டிசம்பர் 26) உணவு பாதுகாப்புத்துறையினர் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் அன்னதானம் வழங்க உள்ளவர்கள் உணவு பாதுகாப்பு துறையின் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா உத்தரவிட்டுள்ளார்.