வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

4778பார்த்தது
நாமக்கல் அருகே அமைந்துள்ள நைனாமலை பகுதியில் இன்று புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இங்கிருக்கும் வரதராஜ பெருமாள் கோவிலானது மலை மேல் உச்சியில் சுமார் 3360 படிக்கட்டுகள் கொண்டதாகும். ஏராளமான பக்தர்கள் மலை உச்சிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாத காரணத்தால் பொதுமக்கள் ஏராளமானோர் அடிவாரத்தில் இருக்கும் ஆஞ்சநேயரை தரிசனம் செய்து செல்கின்றனர் இன்று கூட்டம் அதிகம் இருந்த காரணத்தால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மேலும் அரசு போக்குவரத்து சார்பில் சேந்தமங்கலம் நாமக்கல் புதன் சந்தை ராசிபுரம் ஆகிய பகுதியிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி