நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் ஈக்களை ஒழிக்க வியாழக்கிழமை தடுப்பு மருந்து தெளிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்; புதிய பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் கோழிப் பண்ணைகள் உள்ளதால் ஈக்கள் வருகை என்பது தவிர்க்க முடியாதது உள்ளது.
தடுப்பு மருந்து கொண்டு அவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டாலும் மீண்டும், மீண்டும் படையெடுக்கும் சூழ்நிலை உள்ளது. கடந்த இரண்டு நாள்களாக ஈக்களை ஒழிக்க தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது என்றனர்.