நாமக்கல் மாநகராட்சியில் செப். 17ம் தேதி முதல் அக். 1ம் தேதி வரை தூய்மையை முதன்மைப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதையொட்டி சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டு விழா, மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. தூய்மையே சேவை திட்டத்திற்காக உதவிய சமூக சேவை சங்கஙகள், பள்ளி ஆசிரியர்கள், பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மணவிகளைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.