நாமக்கல்மாவட்டத்தில் மொத்தம் 174 தேர்வு மையத்தில் நடைபெற்றது

60பார்த்தது
நாமக்கல்மாவட்டத்தில் மொத்தம் 174 தேர்வு மையத்தில் நடைபெற்றது
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித்தேர்வில் 10, 137 பேர் பங்கேற்கவில்லை. 41, 278 பேர் தேர்வு எழுதினார்கள்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 பணிக்காக, நாமக்கல் தாலுகாவில் அமைக்கப்பட்டுள்ள 39 தேர்வு மையங்களில் 2, 073 தேர்வர்களும், மோகனூர் தாலுகாவில் 8 தேர்வு மையங்களில் 2, 229 தேர்வர்களும், சேந்தமங்கலம் தாலுகாவில் 17 தேர்வு மையங்களில் 4, 562 தேர்வர்களும், ராசிபுரம் தாலுகாவில் 44 தேர்வு மையங்களில் 13, 355 தேர்வர்களும், பரமத்தி வேலூர் தாலுகாவில் 21 தேர்வு மையங்களில் 5, 872 தேர்வர்களும், திருச்செங்கோடு தாலுகாவில் 35 தேர்வு மையங்களில் 10, 405 தேர்வர்களும், குமாரபாளையம் தாலுகாவில் 10 தேர்வு மையங்களில் 2, 937 தேர்வர்களும் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். மாவட்டத்தில் மொத்தம் 174 தேர்வு மையங்களில் 51, 433 தேர்வர்கள் போட்டி தேர்வினை எழுத ஹால் டிக்கட் பெற்றிருந்தனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி