நாமக்கல் பகுதிகளில் அதிகளவில் மரவள்ளி கிழங்குகள் விளைவிக்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது சிப்ஸ் தயாரிப்பாளர்கள் மரவள்ளி கிழங்குக்கு ஒரு டன்னுக்கு விலையாக ரூ.13 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை வாங்கிச் செல்கின்றனர்.
அதேபோல் சவ்வரிசி தயாரிப்பாளர்கள் ஒரு டன் மரவள்ளி கிழங்கை ரூ.12 ஆயிரத்து 700க்கு வாங்கிச் செல்கின்றனர்.
மரவள்ளி கிழங்குகளை சவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் பல ரக சவ்வரிசி களாகவும், கிழங்கு மாவு போன்றவைகளை தயார் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.