நாமக்கல்: புதிய பெயர் பலகை

61பார்த்தது
நாமக்கல்: புதிய பெயர் பலகை
நாமக்கல்-மோகனூா் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்துக்கு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மாற்றம் செய்யப்பட்டது. 

நகரை விட்டு புறநகர் பகுதியில் அரசு மருத்துவமனை சென்றால் பொதுமக்கள், நோயாளிகள் அவதிப்படுவதாக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன. இந்த நிலையில், பயன்பாடின்றி காட்சியளித்த பழைய அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியை மட்டும் அவசர சிகிச்சைக்காக நகர்ப்புற நலவாழ்வு மையம் என மாற்றியமைத்தனர். 

இங்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இந்த சுகாதார நிலையத்தைக் கண்டறிவது நோயாளிகளுக்கு பெரும் சிரமமாக இருந்தது. இதனால், நாமக்கல்-திருச்சி சாலையை நோக்கி ஒரு நுழைவாயில் உருவாக்கப்பட்டு, நாமக்கல் மாநகராட்சி கணேசபுரம் நகர்ப்புற நலவாழ்வு மையம் என்ற பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி