நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெண்ணந்தூர் ஒன்றிய குழு சார்பிலும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பிலும்
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய உலகப்போராளி சேகுவேரா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பு இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் மணிமாறன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டு இருந்த சேகுவேராவின் உருவப்படத்திற்கு மலர் தூவி கொள்கை முழக்கங்கள் எழுப்பி செவ்வணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் சிபிஐமுன்னாள் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவேல், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்ட செயலாளர் மீனா, திராவிடர் விடுதலைக் கழகம் நகரச் செயலாளர் பிடல் சேகுவேரா, மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.