மோகனூர் அருகே அமைந்துள்ள கீரனூர் பேருந்து நிழற்குடை அமைந்துள்ளது. இந்த நிழல் கூடத்தில் செடிகளும் முட்புதர்கள் நிறைய வளர்ந்துள்ளன. மேலும் இந்த நிழல் கூடாரமானது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலைமையில் உள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேருந்து நிழல் கூடம் இல்லாமல் சாலையில் நின்று பேருந்து ஏறும் நிலைமையில் உள்ளதாக பொதுமக்கள் வேதனை.