நாமக்கல் அருகே விபத்தில் 9 மாத கர்ப்பிணி பெண் பலியானார்

1890பார்த்தது
நாமக்கல் அருகே விபத்தில் 9 மாத கர்ப்பிணி பெண் பலியானார்
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி கொண்டையம்பள்ளியை சேர்ந்தவர் செல்வகுமார் (29). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடியை சேர்ந்த பாலுசாமி மகள் பவித்ராவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. தற்போது பவித்ரா 9 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், இன்று தம்மம்பட்டியில் செல்வகுமார் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.

பின்னர் அங்கிருந்து கர்ப்பிணி பெண் பவித்ராவை, அவரது தந்தை பாலுசாமி மற்றும் உறவினர்கள் ஆம்னி காரில் நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடிக்கு அழைத்து வந்துள்ளனர்.

ஆம்னி வேனை பவித்ராவின் தந்தை பாலுசாமி ஓட்டி வந்துள்ளார். சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள திருமலை பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது சாலையோரம் நின்ற ஜே. சி. பி. யின் மீது மோதி விபத்திற்குஉள்ளானது. கர்ப்பிணி பெண் பவித்ரா சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அவரது கணவர் செல்வகுமார், தந்தை பாலுசாமி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 4 பேரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே ஜேசிபி மீது ஆம்னி வேன் மோதியபோது அங்கிருந்த பேக்கரி ஒன்றில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி