நாமக்கல் கோட்டை மெயின் சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும், அதிகாலை 5:00 முதல் 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள், பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்களும் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வந்து, தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.
அதன்படி, நேற்று (மார்ச் 30) உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 206 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். அதன்படி, 47,745 கிலோ காய்கறிகள், 11,275 கிலோ பழங்கள், 25 கிலோ பூக்கள் என மொத்தம் 59,045 கிலோ விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றை 11,809 பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதன் மூலம், 22 லட்சத்து 14,925 ரூபாய்க்கு விற்பனையானது.