நாமக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இரவு வரை மிக கனமழை பெய்தது. இதில் நாமக்கல் 51.30 மி.மீ., திருச்செங்கோடு 46.20 மி.மீ., பெய்தது. அதிகபட்சமாக கொல்லிமலையில் 59 மில்லி மீட்டர் மழை பதிவானது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு ஒரே நாளில் 400 மில்லி மீட்டர் மழை பதிவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் நாமக்கல் பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.